தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பென்னாகரம் மெயின் ரோட்டில், சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் பங்களிப்புடன் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. வருகிற 14-ந் தேதி இந்த புதிய பஸ் நிலையம் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தர்மபுரியில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் பென்னாகரம் மெயின் ரோட்டில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்த கிடக்கிறது. குறிப்பாக ரெயில்வே மேம்பாலம், புதிய பஸ் நிலையம் வரை உள்ள சாலை மிகவும் இருண்டு போய் கிடக்கிறது. எனவே சாலையில் மின்விளக்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?