கோவை சத்தி ரோட்டில் சரவணம்பட்டி அருகே அம்மன் நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து சரவணம்பட்டி அரசு ஊழியர் குடியிருப்பு செல்லும் சாலையில் ஏராளமான மின்விளக்குகள் உள்ளன. இந்த ரோட்டில் ஓடை குறுக்கிடுகிறது. அந்த ஓடையின் அருகே 3-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் ஒளிராமல் இருக்கிறது. அந்த பகுதியில் புதர்கள் அதிகமாக இருப்பதாலும், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும அந்த வழியாக இரவு நேரத்தில் செல்பவர்கள் பயத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.