நடவடிக்கை தேவை

Update: 2025-12-07 10:24 GMT

 இனயம் பிலால் நகர் பகுதியில் பல தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களின் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்குள் சீராக எரிவதில்லை. தெருவிளக்குடன் இணைக்கப்பட்டுள்ள சுவிட்சு போர்டுகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் தெருவிளக்குகள் சீராக எரியாததால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை சாலையில் சுற்றித்திரியும் நாய்கள் விரட்டுவதும், கடிக்க முயற்சிப்பதுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பலர் கீழே விழுந்து விபத்தில் சிக்கி உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த சுவிட்சு போர்டுகளை அகற்றி விட்டு புதியதை இணைந்து தெருவிளக்குகளை எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஹமீம், இனயம்.

மேலும் செய்திகள்