சேதமடைந்த மின்கம்பம்

Update: 2025-12-07 10:22 GMT

சகாய நகர் ஊராட்சிக்குட்பட்ட அனந்த பத்மநாபபுரம் வடக்கு தெரு உள்ளது. இந்த தெருவில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் இந்த சாலையில் காற்றின் வேகத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்து காணப்படும் மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தர்மராஜன், அனந்தபத்மநாபன்புதூர்.

மேலும் செய்திகள்