நாகர்கோவில் செட்டிகுளம் சித்திரைராஜபுரத்தில் சாலையோரம் ஒரு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிரான்ஸ்பார்மருடன் இணைக்கப்பட்டுள்ள 2 மின்கம்பங்களிலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த சாலையில் வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகளவில் காணப்படும். எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பங்களை நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராகுல், செட்டிகுளம்.