விபத்தில் சிக்கும் அபாயம்

Update: 2025-11-23 18:21 GMT

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வாழப்பாடி செல்லும் வழியில் பொன்னம்மாபேட்டை ரெயில்வே கேட் உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் போதுமான மின் விளக்குகள் இல்லை. மேலும் எச்சரிக்கை ஒளிரும் பட்டைகளும் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி மின் விளக்குகள் மற்றும் எச்சரிக்கை ஒளிரும் பட்டைகள் பொருத்தி தர அதிகாரிகள் முன் வர வேண்டும்.

மேலும் செய்திகள்