புகார் எதிரொலி

Update: 2025-11-23 13:16 GMT

சென்னை துரைப்பாக்கம், ராஜூ நகர் 2-வது தெருவில் மின்சார வயர்கள் பொதுமக்களுக்கு ஆபத்தான வகையில் சாலையோரமாக கிடந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக மின்சார வயர்களை பாதுகாப்பான வகையில் பூமிக்கு அடியில் புதைத்துவிட்டு சென்றனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற ‘தினத்தந்தி‘ பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்