கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில் தவுட்டுப்பாளையம்- பரமத்தி வேலூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பாலத்தில் அமைக்கப்பட்டு உள்ள மின் விளக்குகள் இரவு நேரத்தில் எரிவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த பாலம் இருள் சூழ்ந்து காணப்படுவதால் இப்பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எரியாமல் உள்ள மின் விளக்குகளை எரிய வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.