திருச்சி அருகே உள்ள பழூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மின் கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின் கம்பத்தில் செடி -கொடிகள் படர்ந்து ஆக்கிரமித்து உள்ளது. இதனால் அதன் அருகில் மின்சாரம் பாயும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத் துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி- கொடிகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.