கூடலூர் தாலுகா தேவர்சோலை சிவன் கோவில் அருகே செல்லும் சாலையோரத்தில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் சேதம் அடைந்து கீழே விழும் அபாயத்தில் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என மின்வாரியத்துக்கு பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாக அந்த மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.