கூடலூர் அக்ரஹார தெருவுக்கு செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள் மோதி மின்கம்பம் ஒன்று மிகவும் வளைந்த நிலையில் காணப்படுகிறது. இதுவரை அந்த மின்கம்பத்தை மாற்றவில்லை. இதனால் அதில் உள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பத்தை நேராக நடுவதற்கு அல்லது மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.