கடலூர் முதுநகர் அடுத்த சேடப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் கடந்த 2 வருடங்களாக மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் இருந்தது. இதனால் இரவு நேரங்களில் பஸ் ஏற காத்திருக்கும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே இருந்தனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் கடந்த வாரம் படத்துடன் வெளியானது. இதையடுத்து அப்பகுதியில் புதிதாக மின்விளக்கு அமைத்து மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.