வத்தலக்குண்டுவை அடுத்த விருவீடு தெற்கு தெருவில் உள்ள மின்கம்பங்களில் பொருத்தபட்ட தெருவிளக்குகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழுதடைந்துவிட்டன. அவற்றை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது வரை அந்த தெருவிளக்குகள் எரியாமல் இருக்கின்றன. இதன் காரணமாக இரவில் அந்த பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.