கோபி அருகே மேவாணி கிராமத்தில் பழைய தபால் நிலையம் அருகே உள்ள தெருவிளக்கு பல மாதங்களாக எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. திருட்டு போன்ற அசம்பாவித சம்பவம் நடைபெற வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு தெருவிளக்கை எரியசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.