திங்கள்சந்தை பேரூராட்சி உட்பட்ட ஆரோக்கியபுரத்தில் சில பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மின்னழுத்தம் குறைவாக வருவதால் ஆழ்துளை கிணறுக்கான மோட்டார் தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதைதொடர்ந்து அந்த பகுதியில் சிறிய டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்காக இடம் தேர்வுசெய்யப்பட்டு அதற்கான கட்டுமானப்பணியும் செய்து முடிக்கப்பட்டது. ஆனால், ஒரு ஆண்டு கடந்தும் இதுவரை அந்த இடத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சிறிய டிரான்பார்மர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மரிய ஆரோக்கியம், ஆரோக்கியபுரம்.