பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பந்தப்பிளாவில் இருந்து பொன்னானிக்கு செல்லும் சாலையில் தெருவிளக்குகள் எதுவும் இல்லை. இதனால் இரவில் அந்த சாலையே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் கூட தெரிவது இல்லை. இதனால் அந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும்.