மின்கம்பங்களால் விபத்து அபாயம்

Update: 2025-11-09 09:46 GMT


காங்கயத்தில் புதிய மின்கம்பங்கள் லாரியில் ஏற்றிச்செல்லப்படுகிறது. அப்போது வேகத்தடைகளில் ஏறி இறங்கும் போது பாதி வெளியில் தொங்கியபடி லாரியில் வைக்கப்பட்டிருந்த மின்கம்பங்கள் கீழே விழுந்து போல் ஆடுகிறது. குறிப்பாக வாகனங்கள் மீது விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதில் போக்குவரத்து நிறைந்த பகுதியில் இதுபோன்று எடுத்துச்செல்வது பேராபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

எனவே இதுபோன்று ஆபத்தான முறையில் மின்கம்பங்களை எடுத்து செல்லாமல் இருப்பதோடு, பாதுகாப்பான முறையில் மின்கம்பங்களை ஏற்றிச் செல்ல மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்தி, காங்கயம்.

மேலும் செய்திகள்