சென்னையை அடுத்த ஆவடி 34-வது வார்டுக்குட்பட்ட பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்றின் அடிப்பகுதி சிதிலமடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மின்கம்பம் கீழே விழும் ஆபத்தான நிலை உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் அந்த மின்கம்பத்தை கடந்து செல்கின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி மின்கம்பத்தை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும்.