திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா 2-வது தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்து ஆபத்தான முறையில் உள்ளது. மின் கம்பத்தின் அடிப்பகுதி முழுவதும் சிதிலமடைந்து காணப்படுகிறது. உடைந்து விழுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் மின்கம்பம் அமைந்துள்ள அப்பகுதியை கடக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.