கோவை அருகே கோல்டுவின்ஸ் இந்திரா நகர் பகுதியில் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த மின்கம்பத்தில் செல்லும் மின்கம்பிகளும் தாழ்வாக செல்கிறது. இதன் காரணமாக அங்கு மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சாய்ந்து நிற்கும் அந்த மின்கம்பத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.