சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள திருமால் நகர் சாலையில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் மின்கம்பிகள் சாலையில் தாழ்வாக செல்கிறது. இதனால் வாகனங்கள் செல்லும்போது மின்கம்பிகளில் உரசுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தினை சீரமைத்து மின்கம்பிகளை வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கவுதம், அழகாபுரம்.