நெல்லையில் இருந்து ராமையன்பட்டி வழியாக சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் போலீஸ் குடியிருப்பு, எஸ்.ஆர்.ஆர். நகர் பகுதியில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. மெயின் ரோட்டில் மாடுகள், குதிரை, மான் போன்றவை அடிக்கடி குறுக்கே பாய்ந்து ஓடுவதால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்க அந்த பகுதியில் மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.