திசையன்விளை தாலுகா கஸ்தூரிரங்கபுரம் பஞ்சாயத்து முடவன்குளம் ஊருக்கு மேல்புறம் ரேஷன் கடை அருகில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் அதனைச் சுற்றிலும் புதர் செடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.