மின்கம்பத்தை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள்

Update: 2025-10-19 10:50 GMT

பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் அருகே வயலூர் செல்லும் சாலை ஓரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மின்கம்பங்களில் ஒரு சில மின்கம்பங்களை செடி, கொடிகள் ஆக்கிரமித்து, அதன் மீது படர்ந்து உள்ளன. இதனால் மழை பெய்யும்போது இந்த செடி, கொடிகளை கால்நடைகள் உண்ண முற்படும்போது, அவற்றின் மீது மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தின் மீது படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்