மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2025-10-12 14:39 GMT
செஞ்சி அடுத்த பொன்பத்தி ஏரிக்கரை பகுதியில் தெரு மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. மேலும் எதிர்வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது. எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து அப்பகுதியில் தெரு மின்விளக்குகள் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்