கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 800-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் இடமாக கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலைய முகப்பு வாயிலில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. இந்த விளக்கு நீண்ட நாட்களாக எரியவில்லை. இதனால் பஸ் நிலைய முகப்பு வாயிலேயே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே பழுதடைந்துள்ள அந்த விளக்கை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துராஜ், கிருஷ்ணகிரி.