கிருஷ்ணகிரியில் கட்டிகானப்பள்ளி பி.எஸ்.என்.எல். அலுவலக சாலை வழியாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பேஸ் 2 குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அந்த பகுதியில் உள்ள கம்பத்தில் மின் விளக்குகள் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாக்ரடீஸ், கட்டிகானப்பள்ளி, கிருஷ்ணகிரி.