கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவு அருணா லே அவுட் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏதே ஒரு வாகனம் மோதி அதன் அடிப்பகுதி உடைந்துள்ளது. இதனால் அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்லும்போது பீதியுடன் செல்கின்றனர். மேலும் மின்சாரமும் தடைபடும் நிலைஉள்ளது. ஆகவே உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் உடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.