ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2025-10-12 10:27 GMT

தஞ்சை பகுதியில் தொண்டராயன்பாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மக்களின் வசதிக்காக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் கடந்த சில வாரங்களாக சரிவர எரிவதில்லை. இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள தெருவிளக்குகள் ஒளிர நவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்