நாகர்கோவில் பள்ளவிளை பகுதியில் அம்புரோஸ் நகரில் சாலையோரம் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் செடி கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் மின்கம்பம் இருப்பதே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மின்விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.