ஈரோடு முனிசிபல் காலனி பவளம் வீதியில் உள்ள டிரான்ஸ்பார்மரின் அடிப்பகுதி விரிசல் விழுந்து காணப்படுகிறது. அருகில் மாநகராட்சி சிறுவர் பூங்கா உள்ளதால் அங்கு வரும் சிறுவர், சிறுமிகள் டிரான்ஸ்பார்மரை தெரியாமல் தொட்டுவிட்டால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு டிரான்ஸ்பார்மரை சரிசெய்ய அதிகாரிகள் முன்வர வேண்டு்ம்.