சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம், புழுதிபட்டி சத்திரத்தில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இந்த கோபுர விளக்கு செடி, கொடிகள் புதர் மண்டிய பகுதியில் அமைந்துள்ளதாலும் போதிய சுவிட்ச் வசதி இல்லாததாலும் ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்றவும், பழுதடைந்துள்ள மின்விளக்கு சுவிட்ச்சை சரிசெய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.