நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா திருவம்பலபுரம் பஞ்சாயத்து உலக ரட்சகர்புரம் ஊருக்கு கீழ்புறம் உள்ள மின்மாற்றி சாய்ந்த நிலையில் உள்ளது. மின்மாற்றியின் மின்கம்பங்களின் அடிப்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளதால் பலத்த காற்றில் சரியும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்மாற்றியை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.