பட்டுக்கோட்டை கைகாட்டி அருகே நாடியம்பாள்புரம் வாய்க்கால் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி சேதமடைந்து இருக்கிறது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் நிலையில் இருக்கிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.