கன்னியாகுமரி நகராட்சிக்கு உட்பட்ட ஒற்றையால்விளையில் நடுத்தெருவில் உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் தெருவிளக்கு சீரான முறையில் எரிவதில்லை. அடிக்கடி பழுதாகி விடுகிறது. மின் வாரிய ஊழியர்கள் சரி செய்தாலும் 2 நாட்களில் மீண்டும் பழுதடைந்து விடுகிறது. இதனால், இந்த தெருவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சிலர் தெருவிளக்கு எரியாததால் அங்கு மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், பெண்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி அந்த தெருவில் சீரான முறையில் மின்விளக்கு எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாதன், ஒற்றையால்விளை.