சாய்ந்து நிற்கும் மின்கம்பம்

Update: 2025-10-05 09:43 GMT

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள மல்லியம்பத்து வாசன் வேலி 23-வது கிராஸ் பகுதியில் சாலையோரம் மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் தற்போது சாய்ந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழேவிழும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது பலத்த காற்று அடித்தால் இந்த மின்கம்பம் சாலைகளில் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாய்ந்து நிற்கும் மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்