செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி எதிரே உள்ள காமராஜர் நகர் 3-வது தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள இரும்பு மின்கம்பம் துருபிடித்து சேதமடைந்து விழும்நிலையில் மிகவும் ஆபத்தாகஉள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன்னரே இதை சரிசெய்தால் பெரும் விபத்தை தடுக்கலாம். இந்த உயிருக்கு ஆபத்தான மின்கம்பத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளார்கள். எனவே இது சம்பந்தப்பட்ட மின்சாரவாரிய அதிகாரிகள் துருபிடித்து உடையும்நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.