மின்தடையால் அவதி

Update: 2025-09-28 18:09 GMT
குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர், புலியூர் காட்டுசாகை, பெரிய காட்டுசாகை, சமட்டிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் மின்விசிறியை சரிவர இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் வீட்டில் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இது தவிர அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்தடையால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்களும் பழுதடைந்து வருகின்றன. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்