மேல்வடக்குத்து பஸ் நிலையம் அருகில் உள்ள மின்கம்பத்தில் மின் விளக்கு கடந்த 2 மாதங்களாக எரியவில்லை. இதனால் மின்கம்பகம் காட்சிபொருளாக மாறியதை அடுத்து அங்கு திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.