கோவை மாநகராட்சி 38-வது வார்டு வடவள்ளி மகாலட்சுமி கோவில் வீதியில் உயர் அழுத்த மின்கம்பிகள் வீடுகளின் மேல் பகுதியில் உரசுவது போல அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் சூறாவளி காற்று வீசும்போது மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படும் முன்பு அந்த உயர் அழுத்த மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.