பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட செறியேரி பகுதியில் ஏராளமான பொதுமக்களும், ஆதிவாசி மக்களும் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் போதிய அளவில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அப்பகுதி மக்கள் அவசர தேவைக்கு கூட வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.