பழுதடைந்த மின்மாற்றி

Update: 2025-09-28 10:33 GMT

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா மூவராயன் பாளையம் வெள்ளையன் கொட்டம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மூவராயன் பாளையம், வெள்ளையன் கொட்ம், நல்லான் நகருக்கு மின் வினியோகம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியின் கம்பங்கள் சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள், பாதசாரிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே பழுதடைந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்