ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் கடந்த சில நாட்களாக இரவில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தில் மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.