சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் இருந்து தாரமங்கலம் செல்லும் வழியில் குள்ளானூர் அருகே ஆலமரம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தில் நான்கு புறவழிச்சாலைகளாக பிரிகிறது. இப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக பெண்கள் அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. மேலும் விபத்துகளும் அடிக்கடி நடக்கின்றன. எனவே ஆலமரம் பஸ் நிறுத்தம் பகுதியில் மின்விளக்குகள் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
-சசிகாந்த், தாரமங்கலம்.