ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-09-14 14:34 GMT

பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் ஏரி கடைக்கால் பாலம் வடக்கு பகுதியில் செல்போன் டவர் அருகே உள்ள ஒரு மின்கம்பம் ஆபத்தான நிலையில் சாய்ந்துள்ளது. மேலும் மின்கம்பத்தை சுற்றி ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து மின்கம்பமே தெரியாத அளவிற்கு ஆக்கிரமித்து உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்றி மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்