ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-09-14 13:56 GMT

பென்னாகரம் அருகே சத்தியநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட மோட்டுப்பட்டி கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பம் ஒன்று சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின்கம்பம் முழுவதும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் வேகமாக காற்று அடித்தால்கூட அந்த மின்கம்பம் உடைந்து விழ வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே அந்த மின்கம்பத்தின் அருகே விவசாயி ஒருவர் மாடு மேய்க்கும்போது மின்சாரம் தாக்கி இறந்தார். எனவே பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

-லிங்கேஷ்குமார், பென்னாகரம்.

மேலும் செய்திகள்