தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் யூனியன் நடுவக்குறிச்சி பஞ்சாயத்து பூவுடையார்புரத்தில் 10-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.