பயணிகள் அவதி

Update: 2025-09-14 07:39 GMT

திங்கள்சந்தையில் பஸ்நிலையத்தில் உள்ளது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பஸ்நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் திடீரென ஏற்படும் மின்தடையால் பஸ் நிலையம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பெண்கள், குழந்தைகள் அச்சத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், திருட்டு சம்பங்களும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, பஸ்நிலையத்தில் ஆங்காங்கே சோலார் மின்விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவராம். குளச்சல்.

மேலும் செய்திகள்