விருத்தாசலம் அடுத்த பூதாமூர் சி.என்.சி. நகரில் உள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் ஏதேனும் கனரக வாகனங்கள் சென்றால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.