ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-09-07 13:13 GMT

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த இடையாத்திமங்களம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த நிலையில் எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இந்த மின்கம்பம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம், ரேஷன் கடை உள்ளிட்டவை உள்ளன. இந்நிலையில் மாணவ - மாணவிகள், பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்